About Us

Click here – English version

உலகத்தமிழர் வரலாற்று மையம்உலகப்பந்தெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள் எமது மாவீரர்கள் அந்தவகையில் தமிழர் வரலாற்றினைப் பாதுகாக்கவும், அதனைச்சிதையாமல் எதிர்கால சந்ததியின் கையில் ஒப்படைக்கவும் உலகத்தமிழர் வரலாற்று மையம் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தாயக விடுதலைப்பாதையில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கொள்ளுவதற்கான நினைவாலயத்துடன் தாயக விடுதலையை கேட்டோம் என்ற ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்ட எம்மின மக்களையும் நினைவு கொள்ளக்கூடிய நினைவாலயம் அமைக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

ஏனெனில் தமிழீழப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் உட்பட மாவீரர் நினைவாலயங்கள், தூபிகள், மாவீரர் நினைவுப்பூங்காக்கள், மாவீரர் விளையாட்டுத்;திடல்கள் போன்றவை சிதைக்கப்பட்டு உருக்குலைக்கப்பட்ட நிலையில். இங்கு இப்பணி முன்னெடுக்கப்படுகின்றது.

தாயக விடுதலை என்னும் நெடிய பாதையில் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, எமது கலைகளை வளர்த்தெடுக்கும் பாரிய பணியும் எமது தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாம் முன்னெடுக்கும் இப்பணியானது சகல மக்களினதும், அமைப்புக்களினதும் பங்களிப்புடன்தான் நடைபெற வேண்டும். அதற்காகவே உங்கள் உதவியினை நாடி நிற்கின்றோம். பங்களிப்பு என்பது வெறும் நிதியுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது உங்கள் (தமிழர்) வரலாற்று மையமாகும். இங்கு நீங்கள் தான் உறுப்பினர்கள். ஆகவே நிர்வாகம் தொடக்கம் சகல பணிகளையும் நீங்களே முன்னெடுத்துச் செல்லவேண்டும் இந்த வகையில் நாம் தமிழீழ மாதிரிக் கிராமம் ஒன்றினை அமைக்கவே திட்டமிட்டுள்ளோம். இக்கிராமத்தினுள் தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் நினைவாலயம்  அடங்கலாக, விளையாட்டுத்திடல், சமய, கலை, பண்பாட்டுகளை முன்னிலைப்படுத்தும்; விடயங்கள், ஆவணக்காப்பகம், நூலகம், பெருமண்டபம், உள்ளகவிளையாட்டரங்கு, விவசாயம், காலநடை வளர்ப்பு, படகுத்துறை, நீச்சத்தடாகம், உள்ளடங்கலாக பல கட்டுமானங்கள் இங்கே நிறுவப்படவுள்ளது.
இப்பாரிய திட்டமானது ஒரு நீண்டகாலப்பகுதியினை எடுத்துக்கொள்ளும் என்பது உண்மையாகும்.

இந்த உலகத்தமிழர் வரலாற்று மையமானது முறையாக பிரித்தானிய கொம்பனிச்சட்டம் 2006 இற்கு அமைவாக இலாப நோக்கம் அற்ற கம்பனியாக 18.06.2015 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வரலாற்று மையமானது தொண்டுநிறுவனமாகவே இயங்கும்.  கொம்பனி பதிவிலக்கம் 9645816.
தற்போது இடைக்கால யாப்பு இயற்றப்பட்டு இவ்யாப்பின் அடிப்படையில்
1,    திரு.நல்லைநாதன் சுகந்தகுமார்
2,    திரு. அம்பலவாணர் அகிலவாணர்
3,    குலசிங்கம் சந்திரமோகன்
4,    சொக்கநாதன் கேதீஸ்வரன்
5,    கனகசிங்கம் சத்தியரூபன்
ஆகியோர் இவ்வமைப்பின் இயக்குனர் சபையில் உள்ளனர். இவர்களின் பணியானது வரலாற்று மையத்திற்கான காணியினைக் கொள்வனவு செய்து அதன்பின்னர் உலகத்தமிழர் வரலாற்று மையத்திற்கான  நிரந்தர யாப்பு உருவாக்கப்பட்டு, அந்த யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் புதிய நிர்வாக சபையிடம் கையளிக்கும் வரை இயக்கத்திலிருக்கும்.

அமைவிடம் :-
பல்வேறு பாரிய கட்டுமானங்களை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு ஏற்ப எமக்குப் பெரிய அளவிலான நிலப்பகுதி தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப நாம் பலவேறு புவிசார் விடயங்களைக் கருத்திற்கொண்டு அதற்குப் பொருத்தமான ஒரு நிலப்பரப்பொன்றினை தெரிவு செய்துள்ளோம். இந்நிலப்பரப்பானது 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. பெருந்தெருக்களில் ஒன்றான ஆ40 யில் 10ஆம், 11ஆம் சந்திகளுக்கு இடையில் உலகப்பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்ட் பகுதியில் இந்நிலப்பரப்பு அமைந்துள்ளது.

பெருந்தெருவான ஆ40 பகுதியால் பயணங்செய்யும் போதே இப்பிரதேசத்தனை எம்மமால் காணமுடியும் 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்நிலப்பரப்பு இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து அமைந்துள்ளது. ஒருபகுதி 26 ஏக்கரும், மற்றைய பகுதி 82 ஏக்கருமாகும். இவ்விரண்டு நிலப்பகுதிகளுக்குமிடையில் தொடரூந்துவீதி செல்கின்றது. இதேவேளை தேம்ஸ் நதியுடன் தொடர்புடைய கிளை நதியொன்று இந்நிலப்பரப்பின் ஒருபகுதியின் எல்லையாக உள்ளது. அத்துடன் அந்நதியிலிருந்து பிரிந்து கிளையாறு இந்நிலப்பரப்பினை ஊடறுத்துச் செல்கிறது. மேலும் இந்நிலப்பகுதியில் ஐந்து அறைகளை உள்ளடக்கிய வீடு ஒன்றும் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் தென்பகுதியிலிருந்து வருபவர்கள் பெருந்தெருவான ஆ40 வீதியில் 10ஆம் சந்தியூடாகவும், வடபகுதியிலிருந்து வருபவர்கள் ஆ40 வீதியில் 11ஆவது சந்தியூடாகவும் உள்வரமுடியும்.

எதிர்வரும் காலப்பகுதியில் ஆ40 வீதியிலிருந்து நேரடியாக எமது நிலப்பகுதிக்கு வருவதற்கான புதிய வீதியொன்றினைப் பெறுவதற்குரிய ஒரு சேவை வழங்கும் பகுதியினை (ளுநசஎiஉந) நிறுவுவதற்கு அனுமதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளன.
இதே போன்று எம்மக்களின் வரவு இப்பகுதியில் அதிகரிக்கும் பட்சத்தில் தொடரூந்து நிறுத்தல் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதே வேளையில் எதிர்காலத்தில் எமக்குத் தேவையான மேலதிக நிலங்களை கொள்வனவு செய்யக்கூடிய சுற்றுச்சூழலும் இங்குள்ளன.

இந்தப்பாரிய திட்டமானது உங்களது முழுமையான பங்களிப்பினூடாகவே நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில் கடந்த காலப்பட்டறிவுகளைக் கருத்திற் கொண்டு இப்பணிக்கான நிர்வாகக்கட்டமைப்பு ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவும், சட்ட ரீதியான நிதிக் கையாளுகைக்கு ஏற்பவும் யாப்பு இயற்றப்பட்டு அந்த யாப்பின் அடிப்படையிலேயே இந்த வரலாற்று மையம் இயங்கு நிலையினை அடையும்.

இம்மையமானது தொண்டு நிறுவனமாகவே இயங்கும். இப்பணி அதன் இலக்கை எட்டவேண்டுமாயின் நாங்கள் எல்லோரும் பங்காளர்களாக மாறவேண்டும். எவ்வளவு அதிகமாக எமது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கின்றதோ அந்தளவுக்கு இம்மையம் ஒரு பாதுகாப்பான நிலையினை அடையும். அதேவேளை எம்மால் முன்னெடுக்கப்படும் சகல திட்டங்களும் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இப்பணியின் முதற்கட்ட பணியாக இந்நிலப்பரப்பின் கொள்வனவு அமைகின்றது. அந்த வகையில் அக்காணியின் விலையானது 12,75,000 பவுணடு;களாகும்.அத்துடன் பதிவுக்கூலி, சட்டவாளர் கூலி, கணக்காளர் கூலி, நிர்வாகச் செலவு அடங்கலாக அண்ணளவாக 13,50,000 (பதின்மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம்) பவுண்டுகள் திட்டமதிப்பீடாகச் செய்யப்பட்டுள்ளது. இத்தொகை இந்நிலப்பரப்பை கொள்வனவுக்கு மட்டுமே. இதனைவிட ஏனைய தேவைகளும் உள்ளன. என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே தங்களால் முடிந்த பங்களிப்பினைச் செய்து, அதன் உறுப்பினர்களாக மாறி எமது தாயகவிடுதலை நோக்கிய பயணத்தினை முன்னகர்த்தும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இத்திட்டத்திற்கான உதவி பிரித்தானியாவைக் கடந்து உலகின் சகல நாட்டிலுமிருந்தும் பெறப்படவுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து பங்களிப்புச் செய்ய விரும்புபவர்களுக்கான பங்களிப்புப் பொறிமுறையும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது ஆரம்பக்கட்டப் பணிகளின் போதே பல நம்பிக்கையான செய்திகளும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திட்டங்களுடன் ஆரம்பிக்கப்டும் இப்பணியானது தாயக விடுதலைப் பாதையில் நிச்சயமாக ஒரு முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்பது திண்ணம். அதேவேளை எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது வரலாற்றினையும், எம்மினவிடுதலையின் தேவையினையும் இப்பணி உறுதியாக சொல்லிநிற்கும்.

இச்சிறிய கையேட்டினூடாக சகல விடயங்களையும் எம்மால் தெளிவுபடுத்திவிடமுடியாது. ஆகவே எம்முறவுகளே உங்களுக்குத் தேவையான விடையங்களை அறிந்து கொள்ளவும், உங்கள் பங்களிப்புக்களை (நிதி மற்றும் சரீர உதவிகளை) செய்யவும், ஏனையவர்களைத் தொடர்புபடுத்தி விடவும் இக்கையேட்டிலுள்ள ‘தொடர்பு ஒருங்குகள்’ ஊடாகத் தொடர்பு கொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

Click here – English version