வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்ற சுபன் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா!

முன்னாள் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி மாவீரர் லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவாக “சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா இம்முறை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்றது.

நேற்று முந்தினம் (28-08-2016) ஞாயிறு அன்று நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் பொதுச்சுடரினை லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் சகோதரியும், சகோதரனும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியை திரு. மயில்வாகனம் அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியை திரு. நேயன் அவர்களும், லெப்ரினன் கேணல் சுபன் விளையாட்டுக்கழக கொடியினை அக் கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் திரு. நந்தன் அவர்களும் ஏற்றிவைத்தார்.

பின்னர் இதுவரை காலமும் தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும், போரில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுத் தூபிக்கான ஈகைச்சுடரினை வீரவேங்கை சித்திரன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைக்க, கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத்தூபிக்கான ஈகைச்சுடரினை லெப்ரினன் கேணல் சுபன் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு. பஞ்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மலர்மாலைகளை லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் சகோதரர்கள் அணிவித்தனர்.

இவ் ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி மாலை 6:00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதோடு, அங்கு தாயக உணவுவகைகள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

14102542_1849160971978719_6915369622723320842_n. [downloaded with 1stBrowser] 14089309_1849161041978712_5886803973377280367_n. [downloaded with 1stBrowser] 14089081_1849161001978716_8617695070995821107_n. [downloaded with 1stBrowser] 14040150_1849161138645369_8905479383710183377_n. [downloaded with 1stBrowser] 14088630_1849161215312028_8488797655382190192_n. [downloaded with 1stBrowser] 14141802_1849161905311959_6154446514688935518_n. [downloaded with 1stBrowser] 14079708_1849161198645363_8913198215095808890_n. [downloaded with 1stBrowser] 20160828_141750