“சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா !

முன்னாள் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி மாவீரர் லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவாக “சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா இம்முறை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விளையாட்டு விழாவிற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் சுபன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திற்கு வருகை தந்து விளையாட்டுத் திடலையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.

ஒக்ஸ்பேட்டில் OX17 3NX எனும் முகவரியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய விளையாட்டுத் திடலில் எதிர்வரும் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இவ் விளையாட்டு விழா நடைபெறவுள்ளது.

சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்துகொள்ளும் இவ் விளையாட்டு விழாவில், தேசிக்காய் கரண்டி நடைப் போட்டி, தவளைப் பாச்சல், பழம் பொறுக்குதல், குறுந்தூர நெடுந்தூர ஓட்டப் போட்டிகள், சங்கீதக் கதிரை, கயிறிழுத்தல், கரப்பந்தாட்டம், உதை பந்தாட்டம் போன்ற போட்டி நிகழ்வுகளுடன் மேலும் பல மைதான நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இவ் நிளையாட்டு விழாவிற்கான அனுமதியும், வாகனத் தரிப்பிடமும்  முற்றிலும் இலவசம். அத்துடன் தாயக உணவுவகைகள் பல இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

வயதெல்லைக்கு உட்பட்ட வீர, வீராங்கணைகள் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிப் பத்திரத்தை சமர்ப்பித்து போட்டிகளில் பங்குபெற்றலாம்.

மேலதிக விபரங்களை 07939265940 அல்லது 07853906580 ஆகிய இலக்க கைத்தொலைபேசிக்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

image3 image4