“புதுமை புரட்சி” – கந்துரையாடலுடன் கூடிய மாபெரும் தமிழர் நிகழ்வு!

எமது தாயக விடுதலைப் பாதையின் சுவடுகளையும், வரலாற்றினையும், எமது எதிர்கால சந்ததியிடம் உரிய முறையில் கொண்டுசெல்லும் பாரிய முயற்சியின் ஒரு அங்கமாக உருவாகியிருக்கும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரலாற்றுப் பொறுப்பும், கடமையும் அனைத்து தமிழ் மக்களுக்கும் உண்டு.

அந்த வகையில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் உரிமையாளர்களாகிய உங்களுடன் ஓர் முக்கிய கலந்துரையாடலுக்கான ஒன்றுகூடலை  ஒழுங்கு செய்துள்ளது.

எதிர்வரும் 04-09-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இவ் ஒன்றுகூடலுக்காக அமைக்கப்படும் பிரத்தியேக மாபெரும் கொட்டகைக்குள் (Marky) நடைபெறவுள்ளது.

அத்துடன் இவ் ஒன்றுகூடலுக்கு பெருந்திரளான மக்கள் தத்தமது குடும்பசகிதம் வரவுள்ளதால் அவர்களின் வசதி கருதியும், சிறுவர்களையும் கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் பல ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக…

சிறுவர்களுக்கான முழு நாள் பொழுதுபோக்கு நிகழ்வாக ஊஞ்சல் ஆட்டம், முக வர்ண் பூச்சு (face painting),  துப்பாக்கி சுடுதல், சிறுவர் துள்ளு மேடை (bouncy castle), பாதுகாப்புடன் கூடிய படகுச் சவாரி போன்றன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வு ஆரம்பத்தில் இருந்தே (காலை 9:30) தேனீர், குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிவகைகள் பரிமாறப்படவுள்ளதோடு மதியம் 1:30 மணிக்கு மதிய போசனம் வழங்கப்படும்.

அதைத் தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு மாபெரும் கலந்துரையாடல் இடம்பெறும்.

வரலாற்றுரீதியான இவ் முக்கிய ஒன்றுகூடலில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வந்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடனும், அன்பு உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

A4 flod Invitation2aaa1000 A4 flod Invitation2aaaa1000