மக்கள் மயப்படும் உலகத் தமிழர் வரலாற்று மையம்!

பலரது அயராத உழைப்பாலும், மக்களின் மனமுவந்த பங்களிப்போடும் பாரிய எதிர்காலத் திட்டங்களைக் கொண்டு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் மக்கள் மயப்பட்ட அமைப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் பலரின் சிந்தனையில் மட்டும் உருவான உலகத் தமிழர் வரலாற்று மையம் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் கருத்துக்களை பகிர்ந்து அவர்களின் கருத்துக்களையும் பெற்று சுமார் 100 க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடல்கள் மூலமும், மக்களின் பங்களிப்பின் மூலமும் ஒரு வருடத்தில் அதாவது இவ் ஆண்டு (2016) ஏப்ரல் மாதம் 108 ஏக்கர் நிலப்பரப்பில் இமாலய கனவுகளை சுமந்து உருவாகம் பெற்றது இவ் உலகத் தமிழர் வரலாற்று மையம்.

இம் மையம் பலதரப்பட்ட பணிகளை முன்னெடுத்துவரும் அதே வேளை எதிர்கால பாரிய திட்டங்களை கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் தொடர்ச்சியான கருத்துப் பகிர்வுகளையும், விழிப்புணர்வு செயற்திட்டங்களையும் மறுபுறத்தே செய்துவருகிறது.

அந்த வகையில், இன்றைய தினம் பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர் உற்சவ நிகழ்வில் உலகத் தமிழர் வரலாற்று மையம் காலநிலையை கருத்தில் கொண்டு நிழல் குடை அமைத்து மக்களின் தாக சாந்திக்கான தண்ணீர், மோர், மற்றும் குளிர்பானங்களை வழங்கியதோடு மக்கள் மத்தியில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பணிகள் தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டது.

சுமார் 15,000 (பதினைந்தாயிரம்) க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் உறுப்பினர்கள் பலர் மக்களோடு  கலந்துரையாடி துண்டுப்பிரசுரங்களையும் வினியோகித்தனர்.

குறிப்பாக எதிர்வரும் மாதம் (04-09-2016) உலத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பெருந்தொகை மக்களை உள்வாங்கி நடைபெறவுள்ள “புதுமை புரட்சி” எனும் மாபெரும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு அது தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்ற இப் புதிய நகர்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு உலகத் தமிழர் வரலாற்று மையத்தை அணுகி அதன் உறுப்பினர்களோடு உரிமையோடும், மகிழ்வோடும் உரையாடி சென்றமையும், பங்களிப்புக்களையும், ஆதரவையும் தெரிவித்து சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

image-0-02-01-481308b4a1e88c51f32344a2ea7a03b9a338c75192d59462b070a035bb571d5c-V image-0-02-01-9cd40d3942fa19aa1018fd2c7f9305c35871c811ac11d5ad7a132bd140439d3f-V image-0-02-01-422c3db34ac9cd99276aca7dc1396899e7b5609a79609adabf80f4cb8a177202-V image-0-02-01-fbc582e16f75b79176f0286c81372bca5751493f8371520e190a113a05f2daaf-V image-0-02-01-e96c19a43d6e19237980976f5ccd3f4a731bb65bdb311c18dcc86ffc61962744-V image-0-02-01-5df38c7d9471b8f7c35acdd19b27ac0c0367674fb9659bec0a414ecdc871c9f7-V image-0-02-01-9b1854f53ecf53a80a2237bc480e1949fd2b8917c7e6ea72cc4dca7a6003d74c-V image-0-02-01-fe0475d31d64c4b4d46e4402eb90d74e49fae11cb64e87cf75118c5c26417497-V image-0-02-01-6a54bea2f52a54dd4cb4cfe62ffe62fa98c974b20cd01e8b5d3c32353b5aba2e-V image-0-02-01-9192e076d3aa27df88601aaf3c79ef3f55f0887a10c35791640fad69c36201dd-V image-0-02-01-351c776f07789f869830c4da078f7afcaf52ee4b253d08381061bef99f1f8ef3-V image-0-02-01-ebe8017302064476c4462d1ee0d49617d3140c31de135be510599f10b5b1d58e-V image-0-02-01-6d20e24ed2af9f7a70e6b187094d7a066ac9a55896eebb1823dc53833f190405-V image-0-02-01-a4472927ea763aee63a494476a8605752d9d976a95b3500fe454271114a1c63b-V image-0-02-01-6cc75282171d7eabb703694ac595c92292fa1e94059f765eecf6e8e82717d380-V image-0-02-01-430be3b8594d470de781fe9bcf04ee795bdfed69d923317b225e90aa9bda8d2d-V image-0-02-01-df2bdfe7289555243f1a1c8c833134df95d568ad603b4cf5fae484a7c336c505-V image-0-02-01-ea1a02603bdc5cd5b21fc34ffea99acdabb2a93e1c67b05acf27c0114983000c-V image-0-02-01-2fb21a50970423d8688cd79135b1b994d369753476a91855c2308aaa0e30d80a-V image-0-02-01-d2dc7bbefa9e71e1f96f2fb79dd1375629ac3f854d4b40021f335e4672a805a2-V