தமிழ் மன்னனான பரதனின் ஆட்சியும், அக்கால மக்களும்!

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்;டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று. இதை அடியாக வைத்தே தற்போதுள்ள இந்திய நாட்டை “பாரத நாடு” என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நி நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்;, கந்தருவர், வானரர் என்பனவாகும்.

இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.

உண்மையில் இவர்கள் பன்முக ஆற்றல் கொண்டு  சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர்.

அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினையும்,, செயற்பாடுகளையும் கொண்டே கணித்தனர்.