13 ஆம் நூற்றாண்டின் சேது நாணயம்!

Sethu_coin_13-17_Century_Nallurசேது நாணயம் என்பது 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினரால் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும்.

இதன் ஒரு பக்கத்தில் நின்ற நிலையிலான ஒரு மனித உருவமும், அதன் இரு பக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் யாழ்ப்பாண அரசின் சின்னமான  நந்தியும் “செது” என்ற சொல்லும், மேலே பிறையும் பொறிக்கப்பட்டுள்ளன. இவ் வகையான சேது நாணயங்கள் பல இலங்கையின் வட பகுதியிலும், தென்னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.