உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய ஒன்றுகூடல் (28-02-2016):

WTHS_HILTON_EVENT_30012016_9828பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு உருவாக்கம் பெற்றுவரும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெறவுள்ளது.

வெளிப்படையான மக்கள் கலந்துரௌயாடலுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ் ஒன்றுகூடல், வடமேற்கு லண்டன் பகுதியில் இலக்கம் 89 – Malvern Avenue, Harrow, HA2 9ER எனும் முகவரியில் அமைந்துள்ள St. Andrew Roxborne மண்டபத்தில் மாளை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை  நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு பல விடையங்களை மக்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டும், மக்களின் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படவும் எண்ணியுள்ளதால். இக் கலந்துரையாடலில் பெருமளவான மக்களை வந்து கலந்துகொண்டு கருத்துக்களையும், ஒத்துழைப்புக்களையும் நல்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

நிர்வாகம்

உலகத் தமிழர் வரலாற்று மையம்