இலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், நாம் “யாழ்ப்பாண அரசு” என குறிப்பது இவற்றிலும் பெரிய ஒரு நிலப்பகுதியை ஆகும்.
அதாவது, இன்றைய வடமாகாணம் முழுவதையும், கிழக்கின் பகுதிகளையும், புத்தளம் வரையிலான மேற்குக் கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனுடைய எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது ஆயினும், இதனுடைய தலைமை இடமும், மக்கட்செறிவும் யாழ்ப்பாணக் குடானாட்டிற்கு உள்ளேயே இருந்து வந்திருக்கிறது. இதனாலேயே யாழ்ப்பாண அரசு எனப்படுகிறது.
பல நூற்றாண்டு காலமாக மாறி மாறி அந்த அரசாட்சிகள் அனைத்தும் இவ்வாறே செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன.
யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான “வையாபாடல்” இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது.
இவ்வாறு இலங்கையில்
யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.
- ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)
- ஆரியச் சக்கரவர்த்திகளின் காலம் (கி.பி 12 ஆம் நூஆ – கி.பி 1620)
- குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 – கி.பி 1948)
- ஆங்கிலேயர் ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)
- பிரபாகரன் ஆட்சிக் காலம் (கி.பி 1972 – கி.பி 2009 வரையான தமிழீழ நிழல் ஆரசுக் காலம்)