மக்கள் மயப்படும் உலகத் தமிழர் வரலாற்று மையம்!

பலரது அயராத உழைப்பாலும், மக்களின் மனமுவந்த பங்களிப்போடும் பாரிய எதிர்காலத் திட்டங்களைக் கொண்டு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் மக்கள் மயப்பட்ட அமைப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் பலரின் சிந்தனையில் மட்டும் உருவான உலகத் தமிழர் வரலாற்று மையம் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் கருத்துக்களை பகிர்ந்து அவர்களின் கருத்துக்களையும் பெற்று சுமார் 100 க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடல்கள் மூலமும், மக்களின் பங்களிப்பின் மூலமும் […]

Continue reading


உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற “ஆடி” மாத வணக்க நிகழ்வு!

ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களினதும், போரில்  கொல்லப்பட்ட எமது மக்களினதும் நினைவாக  உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றுவருவது அறிந்ததே. அந்தவகையில், இம்மாதமும் 31/07/2016 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு எமது (உலகத் தமிழர் வரலாற்று மையத்தின்) மண்டபத்தில் இம் மாத நிகழ்வு நடைபெற்றது. கரும்புலி மறவர்களை பூசிக்கும் இம்மாத நிகழ்வில் சிறப்பு ஏற்பாடாக நூற்றுக்கும் மேற்பட்ட கரும்புலி மறவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தமையோடு, இந்த நிகழ்வில் பல நூற்றுக் […]

Continue reading


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் ஒன்று கூடல் 

!

பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினறால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் நினைவாலயம்  அமைக்கும் பணி தொடர்பான விடயங்களை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அதற்கான பங்களிப்புக்களை எமது மக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்றார்கள்.  இப்பணியின் முக்கிய கட்டத்தை கடந்து நிற்கும் தறுவாயில் மேலும் பல முக்கியமான விடயங்களை எமது உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டியுள்ளது. எனவே  வருகின்ற  07/08/2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு (4:00pm) No: 89 – Malvern Avenue, 
South Harrow
, Middlesex
, HA2 9ER 

என்ற […]

Continue reading


லண்டன் தமிழர் விளையாட்டு விழாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பரப்புரை:

பிரித்தானியாவில் வருடாவருடம் இடம்பெற்றுவரும் அனைத்து விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் தமிழர் விளையாட்டுப் போட்டிநேற்றைய தினம்  இடம்பெற்றது. பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் அமைந்துள்ள எட்மண்டன் பகுதியில் உள்ள பிரபல்யமான Lee Valley Leisure Complex இல் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் பெருந்திரளாண மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி பரிசில்களையும் தட்டிச் சென்றனர். பிரித்தானிய தமிழ் மக்கள் அதிகமாக கூடிய […]

Continue reading


இம் மாத மாவீரர் நினைவுவணக்க நிகழ்வு எதிர்வரும் 31-07-2016 அன்று:

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நினைவுவணக்க நிகழ்வின் வரிசையில் இம்மாதமும் (ஆடி) 31/07/2016 ஞாயிறு மாலை 04:00 மணிக்கு நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். சென்ற மாதம் நடைபெற்றது போன்று இம் மாதத்திலும் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் போரின் போது கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான இந்த நினைவுவணக்க நிகழ்வு ஒக்ஸ்பேட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மண்டபத்தில் ( OX17 3NX) நடைபெறும். இந்த நிகழ்வில் இம்மாதத்தில் சிறப்பாக நினைவுகூரப்படும் […]

Continue reading


உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் !

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர் வரும் 03-07-2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பிரதான மண்டபத்தில் (World Tamils Historical Society,  OX17 3NX) மதியம் 12:00 மணிக்கு நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில் பல முக்கிய விடையங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளதால் அனைத்து உறுப்பினர்களையும் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுமாறு […]

Continue reading


உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற ஆனிமாத வணக்க நிகழ்வு!

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் ஒவ்வொறு மாதமும் அந்த மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களினதும், போரில்  கொல்லப்பட்ட எமது மக்களினதும் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றுவருவது அறிந்ததே. அந்தவகையில், இம்மாதமும் 25/06/2016 சனி மாலை 5.00 மணிக்கு எமது (உலகத் தமிழர் வரலாற்று மையத்தின்) மண்டபத்தில் இம் மாத நிகழ்வு நடைபெற்றது. திரு. அமர்நாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை கிளின்ரன் சாரங்கி தமிழர் நுண்கலை கலையகத்தின் அதிபர் திருமதி. வசந்தாதேவி […]

Continue reading


இம் மாத (ஆனி) மாவீரர்கள், மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு 25-06-2016.

இலங்கைத் தீவில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் மிக நீண்டது.  அந்த உன்னத இலட்சிய பயணத்தில் சாதனைகளும், அற்புதங்களும், தியாகங்களும் கொண்டு ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் வியத்தகு வண்ணம் உலகின் முன் நிமிர்ந்து நிற்கிறது. இந்த விடுதலைப் போராட்டம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களினதும், போரில் கொல்லப்பட்ட மக்களதும் உன்னதமான குருதியால் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மண்ணின் விடுதலைக்கு காப்பரணாக நின்று களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், விடுதலைப் போராட்டத்திற்கு தோளோடு தோள் நின்று பல வழிகளிலும் ஒத்துழைப்பு […]

Continue reading


உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற “நட்புக்கான ஒன்றுகூடல்”

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நட்புக்கான ஒன்றுகூடல் ஒன்று கடந்த 05-06-2016 அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்றது. மிகப் பெரும் கனவோடும், இலட்சிய உறுதியோடும் பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் எதிர்கால செயற்திட்டங்கள், அதன் வளர்ச்சி தொடர்பில் ஆதரவாளர்களோடு கலந்துரையாடும் முகமாக நடாத்தப்பட்ட இந்த ஒன்று கூடல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கருத்துரை வழங்கிய பாலா மாஸ்டர் உலகத் தமிழர் வரலாற்று […]

Continue reading


மாவீரர்களுக்கும், தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு!

வைகாசி மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும்,தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்பேட் OX17 3NX என்னும் முகவரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மில்றன்கீன்ஸ் தமிழ் கல்விக்கழகத்தின் தலைவர் குலசேகரம் சுதர்சன் அவர்களும், ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த மயில்வாகனம் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த […]

Continue reading