உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தமிழர் திருநாள் “தைப் பொங்கல்” நிகழ்வுகள்!

அன்பார்ந்த தமிழ் மக்களே! தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தரணி எங்கும் வாழும் தமிழர்கள் வளம் பெற்று வாழ வாழ்த்தும் அதேவேளை 14-01-2017 சனிக்கிழமை அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறவிருக்கும் தைத்திருநாள் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கலை பண்பாட்டு நிகழ்வுகளையும் கண்டுகளிக்க அன்புடன் அழைக்கின்றோம். நன்றி உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராச்சியம்  

Continue reading


தேசியத் தலைவரின் பிறந்த நாளில் 62 பானைகளில் பொங்கல் நிகழ்வு!

அன்பார்ந்த மக்களே, தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள  உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) 62 பானைகளில் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை அழைத்துவருமாறும்  அன்புடன் அழைக்கிறோம். நன்றி […]

Continue reading


பிரித்தானியாவில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, லெப் கேணல் புலேந்தி அம்மான், லெப் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள். லெப் கேணல் விக்ரர் ஆகியோருடன் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களுக்கும், போராட்டத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு  உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று (30/10/2016) ஞாயிறு மாலை 04.00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில், மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை […]

Continue reading


முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட இம்மாத (ஐப்பசி) மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, லெப் கேணல் புலேந்தி அம்மான், லெப் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள். லெப் கேணல் விக்ரர் ஆகியோருடன் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களுக்கும் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு இம்மாதம் 30/10/2016 ஞாயிறு மாலை 04.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் மண்டபத்தில்( OX17 3NX ) வழமைபோல் நிகழ்வு நடைபெறும். அனைத்து மக்களையும் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம். […]

Continue reading


பிரித்தானியாவில் நடைபெற்ற “புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு”

தியாகதீபம் திலீபன் உட்பட புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது. பிரித்தானியாவின் வரலாற்று புகழ் பெற்ற ஒக்ஸ்பேட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நேற்று (25-09-2016) ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணி முதல் 7:30 மணிவரை இந்த நிகழ்வு நடைபெற்றது. நேற்றைய இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூடத்தின் அதிபர் திரு. செல்லத்துரை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை திரு.பாஸ்கரன் (உ.த.வ.மை) அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர்கள் […]

Continue reading


தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட இம் மாதத்தில் (புரட்டாதி) தமிழீழ விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில்  நடைபெறவுள்ளது. பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் பகுதியில் OX17 3NX எனும் முகவரியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். […]

Continue reading


தமிழ் உறவுகளோடு வரலாற்று மையத்தில் இனிதே இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு!

உலகின் மூத்த குடிகளாகவும், மிகவும் முதன்மையான மொழியைக் கொண்டவர்களாகவும், தனித்துவ அடையாளங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட இனமாகவும் வாழும் தமிழ் இனத்தின் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கோடு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராட்சியத்தில்  பரந்துவாழும் தமிழ் மக்களை வரலாற்று மைய வழாகத்தில் வரவேற்று அவர்களோடு கடந்தகால மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்திரையாடும் மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் (04-09-2016) நடைபெற்றது. இந்த நிகழ்வு கலந்துரையாடலோடு மட்டும் நின்றுவிடாது, உணவு  பரிமாற்றத்தோடு சிறுவர்களுக்கான […]

Continue reading


வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்ற சுபன் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா!

முன்னாள் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி மாவீரர் லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவாக “சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா இம்முறை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்றது. நேற்று முந்தினம் (28-08-2016) ஞாயிறு அன்று நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் பொதுச்சுடரினை லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் சகோதரியும், சகோதரனும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியை திரு. மயில்வாகனம் அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியை திரு. […]

Continue reading


“சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா !

முன்னாள் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி மாவீரர் லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவாக “சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா இம்முறை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டு விழாவிற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் சுபன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திற்கு வருகை தந்து விளையாட்டுத் திடலையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட்டுச் சென்றனர். ஒக்ஸ்பேட்டில் […]

Continue reading


“புதுமை புரட்சி” – கந்துரையாடலுடன் கூடிய மாபெரும் தமிழர் நிகழ்வு!

எமது தாயக விடுதலைப் பாதையின் சுவடுகளையும், வரலாற்றினையும், எமது எதிர்கால சந்ததியிடம் உரிய முறையில் கொண்டுசெல்லும் பாரிய முயற்சியின் ஒரு அங்கமாக உருவாகியிருக்கும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரலாற்றுப் பொறுப்பும், கடமையும் அனைத்து தமிழ் மக்களுக்கும் உண்டு. அந்த வகையில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் உரிமையாளர்களாகிய உங்களுடன் ஓர் முக்கிய கலந்துரையாடலுக்கான ஒன்றுகூடலை  ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் 04-09-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று […]

Continue reading